சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பெருமாம்பட்டி பகுதியில் தார் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-நா.தருண், பெருமாம்பட்டி, சேலம்.