
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் ஒரு வாரமாக தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் அவதிப்படுகின்றனர். மழைநீர் தேங்காமல் தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?