வடிகால் பணியை துரித படுத்த வேண்டும்

Update: 2022-07-28 12:48 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் மற்றும், காசுக்கடை தெரு ஆகிய பகுதிகள் ஏராளமான நிறுவனங்கள், கடைகள் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி முழுவதும் எப்போது போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த பகுதியில் மழைநீர் வடிகால் இல்லை. தற்போது வடிகால் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் பணியை துரித படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்