வேகத்தடை அமைக்கவேண்டும்

Update: 2022-07-28 12:41 GMT
கூத்தாநல்லூர் அருகே தோட்டச்சேரி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் வேகமாக சென்று வருவதால் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்