திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து மூலங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் தங்கள் வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் சாலையோரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. இது சாலை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் கருவேல மரங்களால் காயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.