மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி மேமாத்தூர் ஊராட்சி வாழ்க்கை கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?