கடலூர் மஞ்சக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் இருந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. தற்போது அதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.