சேறும், சகதியுமான சாலை

Update: 2022-07-27 17:59 GMT

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதாவது விபத்து ஏற்படும் முன் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயபிரகாஷ், நாழிக்கல்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்