வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-27 16:13 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய பெங்களூரு சாலை அருகே வாசவி தெருவில் வங்கிகள், ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. ஆனால் இங்குள்ள சாலை குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் மழைநீர்் தேங்கியும் நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் தட்டுத்தடுமாறியும் செல்கின்றன. இந்த சாலையில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-எம்.சீனிவாசன், ஓசூர்.

மேலும் செய்திகள்