குண்டும், குழியுமான சாலைகள்

Update: 2022-07-27 16:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் இருந்து அச்சமங்கலம் செல்லும் தார்சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியும், சேரும் சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் அச்சமங்கலம், மிட்டப்பள்ளி, பாலினநாயனப்பள்ளி, ராசிபள்ளி, ஏ-கொல்லப்பட்டி ஆகிய கிராம பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-செழியன், அச்சமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்