திருச்செந்தூர் 1-வது சந்தி தெரு மற்றும் அதன் அருகில் நாலுமுக்கு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. கற்களாக சாலை காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே, இந்த சாலையை சீரமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.