பாலத்தை சீரமைக்கவேண்டும்

Update: 2022-07-27 12:02 GMT
மயிலாடுதுறை, கூறைநாடு கொண்டாரெட்டி தெருவில் இருந்து அறுபத்துமூவர்பேட்டைக்கு பிரிந்து செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் பல்வேறு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். இவ்வாறு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் உள்ள சிறிய பாலம் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் சிலநேரங்களில் விபத்துகளில் சிக்கி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்