கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டிய போது சாலைகள் சேதமடைந்தது . இதனால் மழைக்காலங்களில் சாலை சேரும் சகதியுமாக மாறி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.