சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வனவாசி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் வனவாசி பஸ் நிறுத்தத்தில் அதிக அளவில் கடைகளும் உள்ளன. இதனால் அந்த பகுதி வாகனங்கள் நிறைந்த சாலையாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நங்கவள்ளி-ஜலகண்டாபுரம் சாலையில் வனவாசி மேல்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-அர்ஜூன், வனவாசி, சேலம்.