வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

Update: 2022-07-26 17:32 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் அவ்வப்போது பொதுமக்கள் மீது மோதி படுகாயம் அடைந்து விபத்துகள் நடக்கின்றன. இதை தடுக்கும் வகையில் காந்தி சிலை, போலீஸ் நிலையம் முன்பு, குப்பம், கொங்கணப்பள்ளி ஜங்ஷன் செல்லும் சாலை, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

-பிரசாந்த், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்