ஓசூர் பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையின் குறுக்கே நா.கொண்டபள்ளி ஏரி அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சேதமடைந்து தரைப்பால சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சாக்கப்பா, இடையநல்லூர், ஓசூர்.