கடையம் பஸ் நிலையம் முதல் ராமநதி அணை வரை 7 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், வயல்வெளிகளுக்கு செல்லும் விவசாயிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.