சாலையை ஆக்கிரமித்த செடிகொடிகள்

Update: 2022-07-26 12:52 GMT

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே நத்தமேட்டில் இருந்து கோப்புப்பாளையம் வரை புகழூர் வாய்க்கால் கரையோரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையின் இருபுறமும் நாணல் தட்டு மற்றும் பல்வேறு செடி, கொடிகள் ஆள் உயரத்திற்கு மேல் முளைத்துள்ளன. இருபுறமும் முனைத்துள்ள செடி, கொடிகளால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு இடுபொருட்களையும், விளைந்த பொருட்களையும் எடுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண்சாலையில் இருபுறமும் முளைத்துள்ள நாணல் தட்டு மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி சாலையை சீரமைத்து நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்