சென்னை கொளத்தூர், ஜெயந்தி நகர் மா.போ.சி. தெரு உள்பட அனைத்து பகுதிகளிலும் மண் சாலை மட்டுமே உள்ளது. சிறு மழை பெய்தாலே சேறும், சகதியாய் மாறிவிடுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைகிறார்கள். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.