அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் பெரிய ஏரிக்கு செல்லும் பெரிய ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகிலேயே சிலர் மீன் கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் இவ்வழியே செல்லும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூக்கை பிடித்துக் கொண்டே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.