அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் இருந்து இலங்கைச்சேரி வழியாக ஆதிகுடிக்காடு கிராமம் வரை செல்லும் தார் சாலைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி கடந்த மாதம் பணியை தொடங்கியது. சாலைகள் பறிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. கற்களில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.