விழுப்புரம் சுதாகர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள சாலையை பெயர்த்து எடுத்து பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பள்ளம் மண் கொட்டி மூடப்பட்டது. ஆனால், அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?