மானூரில் இருந்து எட்டாங்குளம், தெற்குபட்டி, சுப்பையாபுரம் வழியாக நெட்டூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?