நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ் நிலைய பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றிய நிலையில், சாலையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.