காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரும்புலியூர் மாம்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகே இருக்கும் சாலையில் செல்லும் லாரிகளும், பஸ்சுகளும் அதிக வேகத்தில் வருவதால் இந்த சாலையை பயன்படுத்தவே பள்ளி மணவர்களும், பெற்றோர்களும் அச்சப்படுகிரார்கள். சமீபத்தில் கூட பள்ளி நுழைவுவாயில் அருகே உள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. ஆனால் அந்த சமயத்தில் மாணவர்கள் யாரும் அங்கே இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மித வேகத்திலேயே பயணம் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.