ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-03 14:22 GMT

ஈரோடு அசோக்நகர் தனியார் பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து காங்கேயம் செல்லும் மெயின்ரோட்டின் இடதுபுறம் உள்ள சாலை மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். வேகத்தடைகள், வெளிச்சம் இல்லாததால் விபத்துகளும் நடந்து வருகின்றன. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைத்து, வேகத்தடைகள் அமைக்கவும், உயர்மின்விளக்குகள் பொருத்தி தரவும் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்