தார் சாலை வேண்டும்

Update: 2023-09-03 10:26 GMT

நாகையில் புதிதாக கட்டப்பட்ட உப்பனாற்று பாலத்தில் இருந்து அக்கரைகுளம் வடக்கு ரோடு புத்தூர் முதல புதுகுளம் வரை சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களும் சாலையில் மிகந்த சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.




மேலும் செய்திகள்