பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் - கும்பகோணம் செல்லும் சிமெண்டு சாலை பல நாட்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,கும்பகோணம்