சாத்தான்குளம் அருகே வேப்பங்காட்டில் இருந்து வீரவநல்லூருக்கு வாய்க்கால் கரை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் முழுவதும் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. மேலும் ராட்சத பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.