அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தா.பழூர் செல்லும் சாலையில் செக்குடி முதல் பெருமாள் கோவில் வரை சாலை அகலப்படுத்தாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் ஒதுங்கி செல்வதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.