அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது அரச நிலையிட்டபுரம் கிராமம். இங்கு 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விக்கிரமங்கலத்தில் இருந்து அரச நிலையிட்டபுரம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.