சாலையில் குவிந்த மண் அகற்றப்படுமா?

Update: 2023-08-23 16:09 GMT

தென்காசி- அம்பை மெயின் ரோட்டில் கடையம் யூனியன் அலுவலகம் அருகில் இருந்து பெட்ரோல் பங்க் வரையிலும் சாலையில் ஆங்காங்கே மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையில் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்