சீரமைக்கப்படாத பாதை

Update: 2023-08-23 15:04 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவப்புரத்திற்கு கிழக்கு பகுதியில் சுடுகாடு இருந்தது. அதற்கு சரியான சாலை வசதி செய்து கொடுக்காததால் அந்த வழியே செல்லும் நீரோடையை தாண்டி சொல்லமுடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுடுகாட்டு பாதையை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். யாரும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது பாளையத்தார் ஏரியை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் சமத்துவபுரம் சுடுகாட்டு பாதையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்