பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காட்டில் இருந்து திருமாந்துறை செல்லும் சாலையில் உள்ள வளைவில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.