நாய்கள் தொல்லை

Update: 2022-07-24 16:30 GMT
தஞ்சை கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திகின்றன. இவை அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. அதுமட்டுமின்றி, சாலையில் செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்