சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் முதலாவது தெருவில் சென்னை குடிநீர் வாரியம் குழாய் அமைக்கும் பணிக்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டியது. ஆனால், இதுவரை சாலை சீர் செய்யப்படவில்லை. பள்ளி மாணவர்கள், முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சாலையை சீர் செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.