விருதுநகர் நகர் பகுதியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் சில இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்கி காயமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.