திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, லெட்சுமாங்குடி-திருவாரூர் சாலை வேளூக்குடி பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?