சிதம்பரம்-கடலூரில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.