பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலையோரங்களில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளதால், சாலையில் செல்பவர்களை வனப்பகுதியில் செல்வது போல உணர வைக்கிறது. மேலும் வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.