சேறும் சகதியுமான சாலை

Update: 2025-10-05 17:49 GMT

சேலம் மாநகராட்சி 21-வது வார்டு பழைய சூரமங்கலத்தில் பெரியார் நகர் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் மண் போட்டு மூடப்பட்டது. பின்னர் மீதமிருந்த மண்ணை அள்ளாமல் அப்படி விட்டு விட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது. மேலும் தற்போது அந்த சாலையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை அகற்றி சாலையை சரிசெய்து தர வேண்டும் என்பதே இ்ங்குள்ள பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

-பிரகாஷ்ராஜ், சோளம்பள்ளம்.

மேலும் செய்திகள்