காஞ்சீபுரம், உழக்கோல்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவில் உள்ள சாலையானது பல வருடமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் இது மழைக்காலம் என்பதால் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வாகனம் ஓட்டுவதற்கும், நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை பல முறை குறைதீர் மன்றம் மூலம் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும்.