கவுந்தப்பாடியில் இருந்து கோபி செல்லும் ரோட்டில் எல்.எம்.பாலப்பாளையம் உள்ளது. அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கா சாலையில் பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் சாலைப்பணி இதுவரை முடியவில்லை. இதனால் எங்கள் ஊருக்கு செல்லும் முக்கிய பாதைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கியாஸ், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வண்டிகள் கூட வர முடியவில்லை. பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்ல ஆட்டோ மற்றும் பள்ளிக்கூட வாகனங்களும் வர முடியவில்லை. எனவே இங்குள்ள பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.