சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-26 11:41 GMT


தஞ்சை -நாகை சாலையில் ராஜீவ் நகர் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாததால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் தஞ்சை

மேலும் செய்திகள்