குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-19 11:27 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பருக்கல் கிராமத்தில் இருந்து தத்தனூர் செல்லும் சாலை அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆவதினால் தற்போது மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கார வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரத்தில் இந்த சாலையில் பள்ளம் இருப்பது தெரியமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்