உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர்-சிறுத்தனூர் வரை சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சாலை ஆங்காங்கே பெயர்ந்து கற்கள் ஊசி போல் காணப்படுவதால், வாகனங்களின் டயரை பதம் பார்த்து விடுகிறது. எனவே சாலையை சீரமைப்பது அவசியம்.