கீழக்கடையம் ரெயில் நிலைய முகப்பில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.