ஈரோடு திரு.வி.க. ரோட்டில் இருந்து ஜான்சி நகர் 2-வது தெரு செல்லும் வளைவில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு் சென்று வருகிறார்கள். பள்ளத்தில் சிக்கி கீழே விழ வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.