ஈரோடு வாசுகி வீதியில் தனியார் பள்ளி அருகே உள்ள ரோட்டில் பஸ்கள் வேகமாக செல்கின்றன. பள்ளி மாணவ-மாணவிகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்கின்றனர். அப்போது வேகமாக செல்லும் பஸ்கள் மாணவ-மாணவிகள் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களும் ஏராளமானோர் நடந்து செல்கின்றனர். உடனே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?