ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் பாலம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பாலம் அமைக்கும் பணியை பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் குழி மூடப்படாமல் திறந்த நிலையிலேயே கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் இந்த குழிக்குள் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.